இலங்கை செய்திகள்


2024 ஆரம்பத்தில் ஜனாதிபதித் தேர்தல்

Mar 18, 2023


ஜனாதிபதித் தேர்தல் நடத்தும் வரை எந்தவொரு தேர்தலையும் நடத்தாமல் இருக்க அரசாங்கம் தயாராக இருப்பதாக அரசாங்கத்தின் உயர்மட்ட தகவலை மேற்கோளிட்டு பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

2024 ஆரம்பத்தில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கு தயாராகுமாறு அரசாங்கத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவருக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதித் தேர்தல் குறித்து நாடாளுமன்றக் கூட்டத்திலும் ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய பிரமுகர்களிடமும் ஜனாதிபதி இது குறித்து பேசியதாக அந்த பத்திரிகை மேலும் தெரிவிக்கிறது.

எவ்வாறாயினும்உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடத்தப்படாது என ஜனாதிபதி எங்கும் குறிப்பிடவில்லை என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.