Aug 04, 2022
நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த திருவிழாவில் பங்கேற்கும் மக்கள் தங்க நகைகள் அணிவதையும் மற்றும் பணத்தை எடுத்துச் செல்வதையும் தவிர்க்குமாறு யாழ்ப்பாணம் பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
அத்துடன், வீட்டில் ஒருவராவது தங்கியிருப்பதுடன் அல்லது பாதுகாப்பாக வீட்டைப் பூட்டி ஆலயத்திற்குச் செல்லுமாறும் யாழ்ப்பாணம் தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கேட்டுக்கொண்டுள்ளார்.
நல்லூர் கந்தசுவாமி ஆலய பெருந்திருவிழா ஆரம்பமாகியுள்ளது. 25 நாள்கள் திருவிழா மற்றும் திருக்கல்யாணம், வைரவர் சாந்தி என 27 நாள்கள் ஆலயத்தில் மக்கள் பெருந்திரளாகப் பங்கேற்பர்.
வழமை போன்று சீருடை மற்றும் சிவில் உடையில் பொலிஸார் கடமைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர். எனினும், திருடர்கள் மற்றும் கொள்ளையர்களின் நடவடிக்கைகள் தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.