இலங்கை செய்திகள்


முல்லைத்தீவிற்கு வந்த ஒரு தொகுதி இந்திய நிவாணப் பொதிகள்

Aug 05, 2022


தமிழக அரசினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட மூன்றாம் கட்ட நிவாரணப் பொருட்களில் ஒரு தொகை முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தை நேற்று வந்தடைந்துள்ளன.

குறித்த நிவாரண தொகையானது சுமார் 100, 000 கிலோகிராம் அரிசி மற்றும் 3,375 கிலோகிராம் பால்மா பொதிகள் உள்ளடங்கப்பெற்றது என்று தெரிவிக்கப்படுகிறது.

கரைதுறைப்பற்று பிரதேச செயலர் பிரிவு, துணுக்காய் பிரதேச செயலர் பிரிவு, மாந்தை கிழக்கு பிரதேச செயலர் பிரிவு, ஒட்டுசுட்டான் பிரதேச செயலர் பிரிவு, புதுக்குடியிருப்பு பிரதேச செயலர் பிரிவு மற்றும் வெலிஓயா பிரதேச செயலர் பிரிவு ஆகிய பகுதிகளுக்கு இந்த நிவாரணப் பொதிகள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன.