இலங்கை செய்திகள்


மீனவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்

Aug 05, 2022


எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்கு மீன்பிடி மற்றும் கடற்பயண நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

மன்னாரிலிருந்து புத்தளம், கொழும்பு, காலி, அம்பாந்தோட்டை மற்றும் பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் மீன்பிடி மற்றும் கடற்பயண நடவடிக்கைகளில் ஈடுபடுவோருக்கே இவ்வாறு அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், நாட்டின் பல பகுதிகளில் மழை வெள்ளப் பாதிப்பு ஏற்பட்டுள்ளதுடன் கடல் கொந்தளிப்பும் அவதானிக்கப்பட்டுள்ளது.