இலங்கை செய்திகள்


மாணவிக்கு நிர்வாண படங்களை அனுப்பிய பிரதி அதிபர் கைது

Mar 17, 2023


கம்பஹா – அத்தனகல்ல பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் தரம் 11இல் கல்வி பயிலும் மாணவிக்கு தனது நிர்வாண புகைப்படங்களை WhatsApp ஊடாக அனுப்பியதாக கூறப்படும்   பாடசாலை  பிரதி அதிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

47 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையான ஆசிரியர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார். WhatsApp செயலி மூலம் மாணவியிடம் தனது நிர்வாணத்தை காட்டுவது மட்டுமின்றி, பாடசாலை காலத்தில் அலுவலகத்திற்கு மாணவியை அழைத்து பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில், மாணவியின் தாயார் குறித்த கையடக்கத் தொலைபேசியில் நிர்வாணப் புகைப்படத்தைப் பார்த்ததாகவும், அது குறித்து மகளிடம் கேட்ட போதே குறித்த விடயத்தை மாணவி தாயிடம் கூறியுள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதையடுத்து பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில், விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.