கனடா செய்திகள்


பிரபல டென்னிஸ் வீரருக்கு கனடா வர அனுமதியில்லை

Aug 05, 2022


கோவிட் தடுப்பூசி விவகாரத்தினால் கனடாவில் நடைபெறும் போட்டித் தொடரில் பங்கேற்கப் போவதில்லை என பிரபல டென்னிஸ் நட்சத்திரம் நொவாக் ஜோகோவிச் (Novak Djokovic) அறிவித்துள்ளார்.

மொன்றியலில் ஹார்ட் கோர்ட் டென்னிஸ் போட்டித் தொடர் எதிர்வரும் நாட்களில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கோவிட் தடுப்பூசி ஏற்றிக் கொள்ளாத காரணத்தினால் அவரை நாட்டுக்குள் பிரவேசிக்க கனேடிய அதிகாரிகள் அனுமதிக்க மாட்டார்கள்.

இந்த தடுப்பூசி விவகாரம் காரணமாக ஜோகோவிச்சினால் இம்முறை அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டித் தொடரிலும் பங்கேற்க முடியாது என தெரிவிக்கப்படுகின்றது.

35 வயதான சேர்பிய வீரரான ஜோகோவிச் கோவிட் தடுப்பூசி ஏற்றிக் கொள்ளாத காரணத்தினால் அவுஸ்திரேலிய ஓபன் போட்டித் தொடரில் பங்கேற்க முடியாது அந்த நாட்டில் தடுத்து வைக்கப்பட் விவகாரம் உலக அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

தடுப்பூசி ஏற்றிக் கொள்ளாது அவுஸ்திரேலியாவிற்குள் பிரவேசித்த காரணத்தினால் ஜோகோவிச்  நாடு கடத்தப்பட்டார்.

தடுப்பூசி ஏற்றிக்கொள்ளாத வெளிநாட்டுப் பிரஜைகள் கனடா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்குள் பிரவேசிக்க அனுமதியில்லை.

எனவே, இந்த இரண்டு நாடுகளிலும் நடைபெறும் பிரதான டென்னிஸ் போட்டித் தொடர்பில் ஜோகோவிச்சினால் பங்கேற்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.