இலங்கை செய்திகள்


பசில் அணி ரணிலுக்கு ஆதரவு

May 14, 2022


பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் கீழ் புதிய  அமைச்சரவையை உருவாக்கும் முயற்சியில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஈடுபட்டுள்ள நிலையில் பிரதான எதிர்க்கட்சிகள் மற்றும் சுயாதீன கட்சிகள் அதனை நிராகரித்துள்ளன. இந்நிலையில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து இன்றைய தினம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் தெரிவிக்கப்படவுள்ளது.

எனினும், பசில் ராஜபக்ஷவின் அணியாக செயற்படும் தரப்பினர் பிரதமர் ரணிலின் தலைமையிலான அமைச்சரவையில் பங்குபற்ற இணக்கம் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பசில் ராஜபக்ஷவின் வேண்டுகோளுக்கு இணங்க  இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.