Sep 18, 2023
பகிடிவதைக்கு எதிரான தேசிய குழுவை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (18) நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 12 மாதங்களில் 36 பகிடிவதை சம்பவங்கள் பதிவாகியுள்ளதுடன் அது தொடர்பில் 57 மாணவர்களுக்கு வகுப்பு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
கடந்த மாதத்தில் மாத்திரம் 12 பகிடிவதை சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.