இலங்கை செய்திகள்


நிர்வாண படங்களை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை

Sep 18, 2023


நிர்வாணப் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை சமூக வலைத்தளங்களில் பரப்புவோருக்கு கடுமையான தண்டனை வழங்கக்கூடிய வகையில் எதிர்காலத்தில் சட்டங்கள் தயாரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான சட்டங்கள் அடங்கிய சட்டமூலம் தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான்  அலஸினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும்  தெரியவந்துள்ளது.

காதல் தொடர்புகளின்போது எடுக்கப்பட்ட தனிப்பட்ட மற்றும் நிர்வாண புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை சமூக ஊடகங்கள் மூலம் பரப்புவதைத் தடுக்கும் நோக்கத்தில் இந்த புதிய விதிகள் தயாரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.