இலங்கை செய்திகள்


நாடாளுமன்ற உறுப்பினரை குறிவைத்து துப்பாக்கிச் சூடு

Sep 18, 2023


தேசிய சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரத்னவின் கார் மீது சில குழுவினர் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

நேற்று (17) இரவு 10.35 மணியளவில் அவரின் வீட்டிற்கு முன்பாக இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாடாளுமன்ற உறுப்பினர்  வெளியே சென்றுவிட்டு மீண்டும் வீடு திரும்பும் போதே துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது.

காரில் அவர் மட்டுமே இருந்ததாகவும், தாக்குதலில் அவருக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்தனர். காரின் இடது பின் இருக்கை பகுதியில் இரண்டு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது

சம்பவம் தொடர்பில் அனுராதபுரம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ள நிலையில் அந்த விசாரணை தற்போது குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரத்னவின் வீட்டிற்கு பொலிஸ் விசேட அதிரடிப்படையின் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.