இலங்கை செய்திகள்


திரிபோஷாவை மீளப் பெறுவது தொடர்பில் தீர்மானம்

Sep 22, 2022


திரிபோஷா குறித்து முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பில் திரிபோஷா நிறுவனத்தின் நிலைப்பாட்டை விளக்கும் அறிக்கையொன்று அதன் தலைவரினால் சமர்ப்பிக்கப்பட உள்ளதாகவும்,  அந்த அறிக்கையில் வெளியாகியுள்ள விடயங்களின் அடிப்படையில் இதுவரை விநியோகிக்கப்பட்டுள்ள திரிபோஷாக்களை மீளப்பெற்றுக்கொள்வதா, இல்லையா என்பது குறித்து தீர்மானிக்கப்படும் என்றும் குடும்ப சுகாதார பணியகத்தின் பணிப்பாளர், வைத்தியர் சித்ரமலீ டி சில்வா தெரிவித்துள்ளார்.

இதனிடையே, திரிபோஷா தொடர்பில் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து தாய்மார்கள் வினவுவதன் காரணமாக, சுகாதார அமைச்சு இதற்கான தெளிவான பதிலை வழங்க வேண்டுமென குடும்ப சுகாதார சேவை உத்தியோகத்தர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.