உலகம் செய்திகள்


சிங்கப்பூரில் டெங்கு காய்ச்சலால் ஒருவர் மரணம்

Feb 10, 2019


சிங்கப்பூர் ஹோகாங் வட்டாரத்தில் வசித்த 77 வயது ஆடவர் டெங்கு காய்ச்சலால் கடந்த வியாழக்கிழமை இறந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சும் தேசியச் சுற்றுப்புற அமைப்பும் அந்தத் தகவலை வெளியிட்டன.

கடந்த 3ஆம் தேதி மற்றோர் ஆடவர் டெங்கு காய்ச்சலால் மாண்டனர்.

அந்த 74 வயது ஆடவர் பிடோக் ரெசர்வார் ரோட்டில் வசித்து வந்தார்.

இந்த ஆண்டில் இதுவரை டெங்கு காய்ச்சலால் ஏற்பட்டுள்ள இரண்டு மரணச் சம்பவங்கள் இவை எனத் தெரிவிக்கப்பட்டது.

டெங்கு தொற்றில் இருந்து பலர் குணமடைந்தாலும், ஒருசிலருக்குச் சிக்கல்கள் ஏற்பட்டு உயிர் இழப்பு ஏற்படலாம் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

அது பெரும்பாலும், முதியோரையும் ஒரே நேரத்தில் பல நோய்களைக் கொண்டவர்களையும் எளிதில் பாதிக்கலாம்.