இலங்கை செய்திகள்


சர்வதேச நாணய நிதியத்துடன் புதிய உடன்படிக்கைகள் இல்லை

Sep 18, 2023


சர்வதேச நாணய நிதியத்துடன் புதிய உடன்படிக்கைகள் மேற்கொள்ளப்பட மாட்டாது என பதில் நிதியமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

ருவன்வெல்லவில் நேற்று மாலை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

வெளிநாட்டுக் கடனை மேம்படுத்துவதற்கான அடிப்படைத் தேவையாக இருந்த உள்நாட்டுக் கடன் உகப்பாக்கம் தற்போது முழுமையாக நிறைவடைந்துள்ளதாகவும், எனவே, வெளிநாட்டுக் கடனை மேம்படுத்துவதையும் விரைவில் முடிக்க முடியும் எனவும் குறிப்பிட்டார்.