கனடா செய்திகள்


கொலையுண்ட பொலிஸாருக்கு இரங்கல்

Mar 17, 2023


எட்மொன்டனில் கொலையுண்ட போலீஸ் உத்தியோகத்தர்களுக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல்களை வெளியிட்டு வருகின்றனர்.

எட்மொன்டன் பகுதியில நேற்றைய தினம் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி இரண்டு போலீஸ் உத்தியோகத்தர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

வீட்டு வன்முறை சம்பவம் ஒன்று தொடர்பிலான முறைப்பாட்டை தொடர்ந்து இந்த உத்தியோகத்தர்கள் இருவரும் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.

இதன்போது குறித்த வீட்டிலிருந்து பிரயோகிக்கப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் உயிரிழந்துள்ளனர்.

31 மற்றும் 35 வயதான 2 பொலிஸ் உத்தியோகத்தர்களே சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர்.

இந்த சம்பவம் அந்தப் பகுதியை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளது.

உயிரிழந்த போலீஸ் உத்தியோகத்தர்களுக்கு அரசியல்வாதிகள் போலீஸ் உயர் அதிகாரிகள் பிரதேச மக்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல்களை தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

வீட்டு வன்முறையுடன் தொடர்புடைய ஆண் ஒருவரினால் இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என போலீசார் தெரிவிக்கின்றனர்.

இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களும் துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்ட நபரும் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.