கனடா செய்திகள்


உக்ரைனுக்கு கனடா வழங்கும் பெருந்தொகை ஆயுதங்கள்

Sep 18, 2023


கனடிய அரசாங்கம் பெருந்தொகை ஆயுதங்களை உக்ரைனுக்கு வழங்குகின்றது.  சுமார் 33 மில்லியன் டொலர்கள் பெறுமதியான ஏவுகணை இவ்வாறு வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிரித்தானியாவிற்கு விஜயம் செய்துள்ள கனடிய பாதுகாப்பு அமைச்சர் பில் பிளயர் இந்த விடயத்தை அறிவித்துள்ளார்.

கனடிய  படையினர், உக்ரைன் படையினருக்கு பல்வேறு போர் பயிற்சிகளை வழங்கி வருகின்றனர். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கனடா, உக்ரைனுக்கு 8 பில்லியன் டொலர்கள் பெறுமதியான உதவிகளை வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.