இலங்கை செய்திகள்


இளைஞன் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு

Nov 24, 2022


மண்டைதீவு பகுதியில் உள்ள அட்டைப் பண்ணையில் பணிபுரிந்த இளைஞன் நேற்று (23) சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக ஊர்காவற்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வண்ணாங்கேணி. பளை பகுதியை சேர்ந்த தவராசா நிதர்சன் வயது 21 என்ற இளைஞனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இந்த இளைஞர் மண்டைதீவு பகுதியிலுள்ள அட்டைப் பண்ணையில் கடந்த காலமாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில், குறித்த இளைஞன் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.