இலங்கை செய்திகள்


இலங்கை தொடர்பில் அமெரிக்கா இந்தியா கலந்துரையாடல்

Aug 05, 2022


இலங்கையின் அரசியல் பொருளாதார நெருக்கடி நிலைமை குறித்து அமெரிக்காவும் இந்தியாவும் உயர்மட்ட கலந்துரையாடல் ஒன்றை நடத்தியுள்ளன.

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருடன் அமெரிக்க இராஜாங்கச் செயலர் அன்டனி பிளிங்கன் ஆகியோர் இலங்கையின் நிலைமை குறித்து கலந்துரையாடியுள்ளனர்.

இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கருடனான சந்திப்பின் போது உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பின் தாக்கங்கள் மற்றும் இலங்கையின் பொருளாதார மற்றும் அரசியல் நிலைமைகள் குறித்து விவாதித்ததாக பிளின்கன் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

கம்போடியாவில் உள்ள புனோம் பென் நகரில் அமெரிக்க – ஆசியான் அமைச்சர்கள் கிழக்கு ஆசிய உச்சி மாநாடு வெளியுறவு அமைச்சர்கள் மற்றும் ஆசியான் பிராந்திய மன்றம் ஆகிய கூட்டங்களின் போது பிரத்தியேக சந்திப்பாக இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.