பெயர் : திரு. பசுபதிப்பிள்ளை தெய்வேந்திரன் (ரவி)
பிறப்பு : 28-04-1964
இறப்பு : 25-05-2022
05592img.png

இல: 121, D10, உருத்திரபுரத்தைப் பிறப்பிடமாகவும், உருத்திரபுரம், கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும்  கொண்டிருந்த பசுபதிப்பிள்ளை தெய்வேந்திரன் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும் நன்றி நவிலலும்.

 

எங்கள் முற்றத்து
இதய நல் நாயகன்
எமை துயரில் விட்டு விட்டு
நெஞ்சிடை பிரிந்து
நெடுந்தூரம் அகன்று
விண்ணிடை விரைந்து
விலகிய பொழுதில்

எம்மோடு இருந்து உதவி புரிந்து, ஆறுதல் கூறி அனுதாபம் வழங்கி,
நேரில் பங்கெடுத்து பரிவினைக் காட்டி தொலைபேசியிலும், மின்னஞ்சல், சமூக வலைதளங்கள்
ஆகியவை மூலமாகவும் இணைய வழியாகவும் கலந்து கொண்டு
அனுதாபத்தை தெரிவித்தும் ஆறுதல் வார்த்தைகளை கூறிய
நல் உற்றார் உறவினர்கள், பெரியோர்கள், நண்பர்கள் அனைவருக்கும்
எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

 

அன்னாரின் அந்தியேட்டிக் கிரியைகள் 22-06-2022 புதன்கிழமை அன்று காலை கீரிமலை புனித தீர்த்தக்கரையிலும், 24-06-2022 வெள்ளிக்கிழமை அன்று அன்னாரது இல்லத்திலும் நடைபெறும், அத்தருணம் தாங்கள் தங்கள் குடும்ப சகிதம் வருகை தந்து அன்னாரது ஆத்ம சாந்தி பிரார்த்தனை நிகழ்விலும் அதனை தொடர்ந்து நடைபெறும் மதியபோசனத்திலும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

இங்ஙனம்,

குடும்பத்தினர்   

இல:121, D10, உருத்திரபுரம்,
          கிளிநொச்சி


நல்லடக்கம்

திகதி 01-01-1970
இடம்:
முகவரி:

தொடர்புகளுக்கு

குடும்பத்தினர்