மரண அறிவித்தல்

பெயர் : திருமதி லோகநாதன் கலைச்செல்வி
பிறப்பு : 2017-July-12
இறப்பு : 2017-October-31
050427img.png

கிளிநொச்சியைப் பிறப்பிடமாகவும், யாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும், கனடா Toronto வை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட லோகநாதன் கலைச்செல்வி அவர்கள் 31-10-2017 செவ்வாய்க்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற தியாகராசா(ஓய்வுபெற்ற உப அதிபர்- புங்குடுதீவு கமலாம்பிகை வித்தியாலயம்), தங்கம்மா(ஓய்வுபெற்ற அதிபர்- புங்குடுதீவு திருநாவுக்கரசு வித்தியாலயம், இராமநாதபுரம் கிழக்கு அ.த.க.பாடசாலை) தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான அம்பலவாணர் கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

லோகநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,

துஷானா, கதுர்ஷன், ஜனுஷ் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

கலையரசி(ஆசிரியை- கிளிநொச்சி), பத்மகாந்தன்(சுவிஸ்), கலைவதனி(கனடா), பிரேமகாந்தன்(அதிபர்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

செல்வராசா(ஓய்வுபெற்ற பிரதிக்கல்விப் பணிப்பாளர்- கிளிநொச்சி), ஜெயகெளரி(சுவிஸ்), தர்மராசா(கனடா), ஷஜனி(ஆசிரியை), இலட்சுமி(முரசுமோட்டை), தர்மலிங்கம்(வவுனியா), நடராசா(இரணைமடு), கணேஸ்வரி(இராமநாதபுரம்), பராசக்தி(இரணைமடு), சரஸ்வதி(கனடா), பரமேஸ்வரி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்

குடும்பத்தினர்


இறுதி வணக்க நிகழ்வு

திகதி சனிக்கிழமை 11/11/2017, 05:00 பி.ப — 09:00 பி.ப &
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.
திகதி ஞாயிற்றுக்கிழமை 12/11/2017, 08:00 மு.ப — 09:30 மு.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.

தகனம்

திகதி ஞாயிற்றுக்கிழமை 12/11/2017, 12:30 பி.ப — 01:30 பி.ப
இடம்: Highland Hills, 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada.
முகவரி: Markham

தொடர்புகளுக்கு

லோகநாதன் — கனடா
தொலைபேசி: +14166617358
கலைவதனி — கனடா
தொலைபேசி: +14167407358
சரஸ்வதி — கனடா
தொலைபேசி: +14168329737
-->


துயர் பகிர்வு