4ம் ஆண்டு நினைவஞ்சலி

பெயர் : அமரர் கிறிஸ்ரிரூபன் அல்றிக் செளஜன்யன்
பிறப்பு : 2006-July-19
இறப்பு : 2013-July-10
096996img.png

வவுனியாவைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும், ஜோர்தானை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கிறிஸ்ரிரூபன் அல்றிக் செளஜன்யன் அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.

எந்தசந்தோசங்களும்
சந்தோசமாயில்லை–கண்ணே
நீ - இல்லாமல்!

இன்னும் தான்
ஏற்கமுடியவில்லை–நீ
இல்லை என்பதையும்
அதன் பின்னரான
சந்தோசங்களையும்!

எந்தச் செயலிலும் - கண்ணே
நீதானே நிற்கின்றாய்
எம் முன்னே!

உன் வயதொத்தவர்களை
காணும் போதெல்லாம்
சொல்ல முடியா ஏக்கம்
எம்மைப் புரட்டிப் போடுகிறதேயடா!

இந்தச் சமூகமும் உலகமும்,
ஒரு அன்புமிக்கவனை
பண்புகொண்டவனை
ஒரு அழகுப் பூஞ்சிலையை
அறிவுப் பதுமையை
ஒரு கருணைமிக்கவனை
கண்ணியமானவனை
ஒரு புன்னகை மலரை
பூக்குட்டியை
ஒரு குறும்புக்காரனை
கால்பந்து வீரனை
ஒரு பொறுப்புமிக்கவனை
பொறுமை உள்ளவனை
ஒரு சமாதானத் தூதுவனை
செல்லக் கோபக்காரனை
ஒரு நல்ல நண்பனை
சிறந்த மாணவனை
ஒரு குழந்தைகளின் தோழனை
சிறந்த கதை சொல்லியை
இழந்துவிட்டதே!

அவரவருக்கு–நீ
அதுஅதுவாய் இருந்தாலும்
எமக்கு நீ
எல்லாமாகவன்றோ இருந்தாய்!

மொத்தமாகஉன்னை
வாரிக் கொடுத்துவிட்டு
விழியோரம் எந் நாளும்
கண்ணீர் சுமக்கின்றோம்!

வழியெங்கும் உன்னைப்
பார்த்து நிற்கின்றோம்!
நினைவாக உள்ள நீ
நிஜமாக வந்துவிட
வழியெங்கும் உன்னையே
பார்த்து நிற்கின்றோம்!

 

தகவல் குடும்பத்தினர்


தொடர்புகளுக்கு

தகவல் குடும்பத்தினர்
94718455618

இறந்தவரின் புகைப்படங்கள்

-->


துயர் பகிர்வு