மரண அறிவித்தல்

பெயர் : திருமதி பாலசிங்கம் கமலாம்பிகை
பிறப்பு : 27 செப்ரெம்பர் 1940
இறப்பு : 15 யூன் 2017
030914img.png

யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், வவுனியா செட்டிக்குளம் முகத்தான்குளத்தை வசிப்பிடமாகவும், திருநாவற்குளத்தை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட பாலசிங்கம் கமலாம்பிகை அவர்கள் 15-06-2017 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம், தெய்வானை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற இராமநாதர், மீனாட்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

பாலசிங்கம்(ஓய்வுபெற்ற கிராம சேவையாளர்) அவர்களின் அன்பு மனைவியும்,

மனோக்குமார்(குமார்- கனடா), பவானி(கனடா), வசந்தகுமார்(வசந்தன், தபாற் கந்தோர்- வவுனியா), வசந்தினி(ஆசிரியை- சாந்தசோலை), பிரசாந்தகுமார்(பிரபா- கனடா), சிவகுமார்(பவன்- காப்புறுதி முகாமையாளர்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற தங்கரத்தினம், சிவநாயகமூர்த்தி(கனடா, முன்னாள் பிரதிக் கல்விப் பணிப்பாளர்- யாழ்ப்பாணம்), பராசக்தி(மணி- ஓய்வுபெற்ற ஆசிரியர்- கிளிநொச்சி), அன்னபூரணி(மலர்- ஓய்வுபெற்ற தாதிய சகோதரி, வவுனியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

விமலாதேவி(விமலா- கனடா), விக்னேஸ்வரன்(கிருபா- கனடா), சுபாலினி(ஆசிரிய ஆலோசகர்- வவுனியா), சத்தியானந்தன்(ஆசிரியர்- கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயம்), அஜந்தினி(கனடா), துதிப்பிரியா(அபிவிருத்தி உத்தியோகத்தர்- வவுனியா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற செல்வராஜா, தனலட்சுமி, சண்முகம், சச்சிதானந்தன், காலஞ்சென்றவர்களான கந்தையா, பொன்னம்மா, கணபதிப்பிள்ளை, குஞ்சிப்பிள்ளை, சின்னம்மா, தர்மலிங்கம், பரமலிங்கம், பார்வதி மற்றும் கண்மணி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

மீனுஷா, கபிஷன், மலரவன், துஷானி, சுபாங்கன், ரிசாங்கன், துளசிகன், சுரேஸிகன், ஆரணியா, ஹரிராம், ஹர்சினி, ஆரபி, மாதுளன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 18-06-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ந.ப 12:00 மணியளவில் பத்தினியார் மகிழங்குளம் இந்துமயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
இல: 44,
2ம் ஒழுங்கை,
திருநாவற்குளம்,
வவுனியா.

தகவல்

குடும்பத்தினர்


தொடர்புகளுக்கு

பாலசிங்கம்
94242222945,94773415719
-->


துயர் பகிர்வு