10ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு
2006
07
19
இறப்பு
2013
07
10
அமரர் அல்றிக் செளஜன்யன் கிறிஸ்ரிரூபன்
பிறந்த இடம் : வவுனியா
வாழ்ந்த இடம் : வவுனியா, ஜோர்தான்
வெள்ளைசாமி சுப்பையா 1951 - 2019 யாழ்ப்பாணம் இலங்கை

  • பிறப்பு : 19-07-2006
    இறப்பு : 10-07-2013

"உலகின் அனைத்திலும் இரக்கம் காட்டு
சந்தோசமாயிரு
துன்பங்களை மறந்தாலே சந்தோசம் வரும்
பிரார்த்தனை செய். நம்பிக்கையோடிரு!"
- அல்றிக் சௌஜன்யன்-

வவுனியாவைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும், ஜோர்தானை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அல்றிக் செளஜன்யன் கிறிஸ்ரிரூபன் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.

 

வான் தந்த வள்ளலே!

தேன் சிந்தும் சொல்லனே!

மான் ஆகத்தெரிந்தாயே

ஏன் வாட்டிப்போனாயோ?

 

காணாது ஏங்குகிறோம்

கண்கள் தனை மூடுகிறோம்

கண் விழிக்கும் பொழுதெல்லாம்

கண்ணே வர மாட்டாயோ?

 

வீணான வாழ்க்கையென - தினம்

வேகின்ற நெஞ்சுக்குள்

நீரான உன் நினைவில்

நித்தம் உயிர் வாழுதடா.

 

போராடிப் பெற்ற வாழ்வில்-உயிர்(ப்)

பூவாக வந்தாய் ஐயா!

நீர் உன்னைத் தின்ற பின்பு(ம்)

வேர் ஆகும் உன் நினைவே.

 

பூவே, பொன்னமுதே!

‘வா!’ என்றே பதறுகிறோம்

சாவினைத் தின்ன ஒரு

வரம் வேண்டிக் கதறுகிறோம்.

 

காதுக்குள் சிணுங்குதே

கலகலக்கும் உந்தன் குரல்

கண்ணுக்குள் நிறையுதே

கனிவான உன் பார்வை.

 

பைய வரும் உன் பேச்சு

மெய் சிலிர்க்கும் உன் மென்மை

மையல் தரும் உன் அழகு

ஐயோ....?- இனி இல்லையடா.

 

குருவியாய் நீ திரிந்த

கால்பந்து மைதானம்,

அருவியே! நீ வரத்தான்

காத்துக்கிடக்கிறதே!

 

பரிதவிக்கும் நாட்கள் இங்கே

பத்தாண்டாய் ஆனதட

பரிதியாய் வந்து நீயும்

பசுமைதனை தந்திடடா!

 

தெய்வமே! - நீ

வந்து சேர்ந்திட்டால்

உய்வமே - எமது

இந்தப்பிறவி தனை.

 

உன் நினைவுகளோடு அப்பா, அம்மா,சகோதரர்கள்

 


தொடர்புகளுக்கு

குடும்பத்தினர்


துயர் பகிர்வு

 

Powered by Jasper Roberts - Inayam