கனடா Mississauga வைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்டிருந்த நிரோஷா உதயகுமாரன் அவர்களின் 9ம் ஆண்டு நினைவஞ்சலி.
நிரோ!
காற்றோடு கலந்து கனவாகிப்போய்
இன்று ஆண்டு ஒன்பது
ஆறமுடியவில்லை- நிரோ!
அந்தோ அன்னக் கிளிபோன்ற
அழகிய மகளே நிரோஷா
உந்தன் பிரிவால் இன்றும் நாம்
ஒவ்வொரு கணமும் துடிக்கின்றோம்!
உன்னைப் பிரிந்த நாள் முதல் இன்று வரை,
உன் அன்பிற்கு இணை யாருமில்லை
உன் பாசத்திற்கு ஏங்கும் எங்கள் ஏக்கங்கள்
உணர முடியாத வலியாய் எங்களை கொல்கிறது.
உன்னழகு வதனம் காணாத
எம்மனம் நாளுமேங்கி நில விழந்த
வானமென இருண்டு கிடக்குதம்மா!
விழிகள் சொரிகிறது
நிரப்ப முடியா வெற்றிடத்தை உருவாக்கி
எம்மை நிலைதடுமாற வைத்து
எங்கு சென்றாய்?
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
தகவல்: அப்பா, அம்மா, சகோதரிகள்
குடும்பத்தினர் |