யாழ். புங்குடுதீவு 4 ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி மற்றும் கொழும்பை தற்போதய வதிவிடமாகவும் கொண்ட நாகநாதர் செல்லத்துரை அவர்கள் 23.02.2022 புதன்கிழமை அன்று கொழும்பில் காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான நாகநாதர் பர்வதம் இணையரின் அன்பு மகனும் காலஞ்சென்றவர்களான சின்னையா விசாலாட்சி இணையரின் மருமகனும்,
யோகம்மா(ஓய்வு பெற்ற ஆசிரியை) அன்புக் கணவரும், மதிவதனி, மதிவதனன், மதிவண்ணன், றஜனி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ஆறுமுகம்(பிரான்ஸ்) காலஞ்சென்றவர்களான இராமலிங்கம், சீதேவிப்பிள்ளை, கணபதிப்பிள்ளை, தர்மலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தனலட்சுமி, காலஞ்சென்ற சேனாதிராஜா, பரமலிங்கம், நவமணி, முத்துலிங்கம், காலஞ்சென்ற சாந்தலிங்கம், செல்வநாயகி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கேசவராஜா, கீதா, விஜயா, தயாபரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அபிராம், அமுதா, கீர்த்தனா, தக்க்ஷினியா ஆகியோரின் அன்பு பேரனும் ஆவார்,
அன்னாரின் பூதவுடல் 26-02-2022 சனிக்கிழமை மு.ப. 10:00 மணிமுதல் பி.ப.1.00 மணிவரை கொழும்பு பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்கு வைக்கப்பட்டு 27-02-2022 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணியளவில் இறுதிக்கிரிகைகள் நடைபெற்று பொரளை கனத்தை மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தகவல் : குடும்பத்தினர்
மதிவதனன் - மகன் |
+194718428457 - இலங்கை |