நினைவழியா நாட்களை
நெஞ்சோரம் நிறுத்தினோம்.
சிதைவடையா நினைவுகள்
பலவாகிப் பறந்தன.
கிளி மண்ணின்
ஒப்பற்ற ஆளுமை,
நிகரில்லா தோழமை
கண்முன்னே விரிந்தது.
கற்ற கல்லூரிக்கே
முதல்வர் எனும்
காவலனானாய்.
கனவு சுமந்த - பல்லாயிரம்
மாணவர்க்கும்
தந்தையுமானாய்.
அன்பை அரவணைத்து,
அழுத்தங்களைப் புறந்தள்ளி,
அறவழி நடந்தாய்.
பாரபட்சமின்மையை
வேதவாக்காய் விதைத்தாய்.
மந்திரிக்கும் புன்னகையால்
மனதை வென்றாய்.
தீர்வின்றிய பிணியால் - வீழ்ந்தாலும்
நீங்கள் விதைத்தவை
பல்லாண்டுகள் இங்கு
அறுவடையாகும்.
அப்போதெல்லாம் - நீங்கள்
பிறப்பெடுப்பீர்கள்
எம் மனங்களில்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
துயரில் பங்கு கொள்ளும்
கிளிநொச்சி நண்பர்கள் குழு
கிளிநொச்சி நண்பர்கள் குழு |