6ம் ஆண்டு நினைவஞ்சலி

பெயர் : அமரர் கிறிஸ்ரிரூபன் அல்றிக் செளஜன்யன்
பிறப்பு : 2006-July-19
இறப்பு : 2013-July-10
076189img.png

வவுனியாவைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும், ஜோர்தானை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கிறிஸ்ரிரூபன் அல்றிக் செளஜன்யன் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.

அன்னார், கிளிநொச்சியைச் சேர்ந்த கிறிஸ்ரிரூபன் நிமலினி தம்பதிகளின் அன்புப் புதல்வர் ஆவார்.

 

"உலகின் அனைத்திலும் இரக்கம் காட்டு.
சந்தோசமாயிரு. துன்பங்களை மறந்தாலே சந்தோசம் வரும்.
பிரார்த்தனை செய். நம்பிக்கையோடிரு!"
-அல்றிக் சௌஜன்யன்-

 

கண்ணே கண்ணாக வருவாயா
கருவில் உயிராக மலர்வாயா
ஆனந்தம் மீண்டும் தருவாயா
அருகினில் மீண்டும் தவழ்வாயா


நெஞ்சில் கனலது கொஞ்சமில்லை
நித்தம் அழுகைக்கும் பஞ்சமில்லை
செஞ்சொல்லால் வருடும் தேவதையே
சித்தம் தெளிவிக்க வா இனிதே


குறும்பு காண மனம் ஏங்குதடா
குறுஞ்சிரிப்புக்கு ஆவல் மேவுதடா - உன்
நற்செயல் எதையம் காணாமலே
நடக்கின்ற பிணமாக ஆனோமடா


எங்கள் கண்ணே - எங்கள்
சின்ன கண்ணே!


'கடவுள் அது உண்மையா அறியோம்
இருந்தால் 'அது' நீயே - உணர்ந்தோம்
கடவுளை பெற்றிட்ட
பெருமையைத் தந்தாய்
கடவுளை வளர்த்திட்ட
வாழ்வையும் தந்தாய்
கடவுளாய் வணங்கிடும்
துயரமும் தந்தாய்
கடவுளாய் இருந்து நீ
மற்றோரைக் காப்பாய்

 

எமது சௌ குட்டியின் நினைவுத் திருப்பலி வட்டக்கச்சி
புனித சூசையப்பர் தேவாலயத்தில் 10-7-2019 புதன்கிழமை
மாலை 5 மணிக்கு ஒப்புக்கொடுக்கப்படும்.
இத்திருப்பலியில் அனைவரும் கலந்து கொண்டுஇ எமது செல்லக் கண்மணியின்
ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

 

தகவல்

குடும்பத்தினர்

 


தொடர்புகளுக்கு

தகவல் குடும்பத்தினர்
-->


துயர் பகிர்வு