மரண அறிவித்தல்

பெயர் : சபாநாயகம் தேவானந்தன்
பிறப்பு : 1958-June-02
இறப்பு : 2019-April-13
095882img.png

பொறியியலாளர்
வணிக முகாமையாளர் -  Sahid Sendiriyan Berhad, Brunei


கரவெட்டி மத்தி - சாமியன் அரசடியைப் பிறப்பிடமாகக் கொண்டவரும் கனடா, புரூணை (Brunei) ஆகிய நாடுகளை வதிவிடமாகக் கொண்டவருமான சபாநாயகம் தேவானந்தன், 13.04.2019 சனிக்கிழமை புரூணையில் காலமானார்.

அன்னார், சபாநாயகம் - சிவகாமிப்பிள்ளை தம்பதியரின் அன்பு மகனும் கந்தசாமி - தேவசேனா தம்பதியரின் அன்பு மருமகனும் குமுதினியின் ஆருயிர்க் கணவரும் கோசலையின் பாசமிகு தந்தையும்

காலஞ்சென்ற யோகானந்தன், மற்றும் கமலினி (கனடா), நந்தினி (கனடா),
குகானந்தன், மாதினி, காலஞ்சென்ற சதானந்தன் ஆகியோரின் அன்புச்சகோதரனும் சுந்தரராஜன் (கனடா), சகுந்தலா (கனடா), காலஞ்சென்ற மகாதேவன், மற்றும் கலாதேவி, அமிர்தலிங்கம், சியாமளா (இங்கிலாந்து), சிவசிதம்பரம் (சிங்கப்பூர்) , குருபரன் (இங்கிலாந்து),  இளவேந்தன் (அவுஸ்திரேலியா)    ஆகியோரின் அருமை மைத்துனரும் 
காலஞ்சென்றவர்களான கந்தசாமி - பராசக்தி,  மனோன்மணி,  மகேஸ்வரி மற்றும் கமலேஸ்வரி , காலஞ்சென்றவர்களான வேலாயுதம் - பஞ்சபாக்கியம், மற்றும் செல்வவிநாயகம் - சரஸ்வதி ஆகியோரின் மருமகனும் காலஞ்சென்றவர்களான சிற்றம்பலம் - பொன்னம்மா, கணேசநாயகம், சிவானந்தநாயகம், செந்திநாயகம் ஆகியோரின் பெறாமகனும் யோகமூர்த்தி, சிவலோஜினி, கலைவாணி, வித்தியா ஆகியோரின் சகலனும்
உமாவேணி, கலைவாணி, அமலன், அபயன், ஆதித்தன், ஸ்ரீபரன், ஸ்ரீபரணி ஆகியோரின் மாமாவும் கஜாஜனன், வைகுந்தன் ஆகியோரின் பெரியப்பாவும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் ஏப்பிரல் 21, 2019 ஞாயிற்றுக்கிழமை மதியம் 12:00 மணியிலிருந்து இறுதி வணக்கத்துக்காக 2B Elvitigala Mawatha, Colombo - 8 என்னும் முகவரியில் உள்ள பொரளை ஜெயரத்ன மலர்ச்சாலையில் வைக்கப்பட்டு, பிற்பகல் 2:00 மணியிலிருந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, பிற்பகல் 3:00 மணிக்கு கனத்தை மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உறவினர், நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.


இறுதி வணக்க நிகழ்வு

திகதி 2019-April-21 & 12:00pm
முகவரி: கொழும்பு - பொரளை ஜெயரத்ன மலர்ச்சாலையில் (2B Elvitigala Mawatha, Colombo - 8)

தகனம்

திகதி 2019-April-21 3:00pm
இடம்: கொழும்பு - பொரளை ஜெயரத்ன மலர்ச்சாலையில் (2B Elvitigala Mawatha, Colombo - 8)
முகவரி: நடைபெறும். நாளும் நேரமும் பின்னர் அறியத்தரப்படும்.

தொடர்புகளுக்கு

சிவசிதம்பரம்
+94 75 833 6910
சுந்தரராஜன்
416 297 7328
ஆதித்தன்
905 900 0062
குகானந்தன்
+94 77 360 4062
அமிர்தலிங்கம்
+94 77 668 5002
-->


துயர் பகிர்வு