மரண அறிவித்தல்

பெயர் : DR. நடராஜா சிவராஜா - முன்னாள் தலைவர் சமுதாய மருத்துவத்துறை, மருத்துவபீடம் யாழ் பல்கலைக்கழகம், முன்னாள் ஆலோசகர்-உலக சுகாதர நிறுவனம், தலைவர் - வலுவிழந்தோர் புனர்வாழ்வுச்சங்கம், தலைவர் - புற்றுநோயாளர் காப்பகம்(வடக்கு, கிழக்கு), ஸ்தாபகர் - AHEAD TRUST
பிறப்பு : 1938-April-12
இறப்பு : 2019-March-06
095420img.png

நீர்கொழும்பை பிறப்பிடமாகவும் ஆனைக்கோட்டை மற்றும் திருநெல்வேலியை வசிப்பிடமாகவும்கொண்ட Dr.நடராஜா சிவராஜா 06,03,2019 அன்று இறைபதம் எய்தினார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான நடராஜா ( ஓவசியர் )சிவபாக்கியம் தம்பதியினரின் சிரேஷ்ட புத்திரனும் காலஞ்சென்றவர்களான குமாரசாமி கனகம்மா தம்பதியினர் மற்றும் காலஞ்சென்றவர்களான கனகசபை நாகம்மா தம்பதியினரின் ஆகியோரின் அன்பு மருமகனும், காலஞ்சென்ற ரஞ்சனாதேவி மற்றும் மலையரசி (ஓய்வுநிலை சிரேஷ்ட தொழில்நுட்பவியலாளர்மருத்துவபீடம் யாழ் பல்கலைக்கழகம்)ஆகியோரின் அன்புக் கணவரும் Dr.மீனா (இணைப்பேராசிரியர் இரசயனவியல்துறை யாழ் பல்கலைக்கழகம்), Dr. கல்பனா (சிரேஷ்டஉதவி நூலகர் யாழ் பல்கலைக்கழகம்), ஆகியோரின் அன்புத் தந்தையும் செந்தில் நந்தனன் (மேலதிக செயலாளர் மீள் குடியேற்ற புனர்வாழ்வு அமைச்சு), சந்திரசேகர் (பிரதி அதிபர் மகாஜனா கல்லூரி தெல்லிப்பளை) ஆக்யோரின் அன்பு மாமனாரும், காலஞ்சென்ற சிவனேஸ்வரி (பெரிய பேபி) மற்றும் மகேஸ்வரி(சின்ன பேபி), விக்னராஜா (UK), ஸ்ரீஸ்கந்தராஜா (Norway), செல்வராஜா (UK) ஆகியோரின் பாசமிகு அண்ணாவும் காலஞ்சென்ற ஸ்ரீவிக்னேஸ்வரன் (ஓய்வு நிலை உப அதிபர்,யாழ்தொழில் நுட்ப கல்லூரி மற்றும் நித்தியானந்தன் (ஓய்வுநிலை கணக்காய்வு முகாமையாளர் பரந்தன் இரசாயண கூட்டுத்தாபனம்), சிவாஜினி (UK)சத்தியதேவி(Norway), விஜயலக்சுமி (ரம), கருணாதேவி பூபாலராஜா(UK), நிhமலாதேவி கதிர்காமநாதன்(Canada), சுபத்திராதேவி சண்முகநாதன், விஜயகுமார (Canada), அகிலேஸ்வரன் (USA),சுகுணதேவி வேணுகோபால்(கனடா), ஜெகதீஸ்வரன் (Canada), யோகேஸ்வரன் (Canada), நிலாந்தினிதேவி கிரிதரன் (ரம), காலஞ்சென்ற க. பசுபதிப்பிள்ளை (ஓய்வு நிலை பொறியியலாளர் புகையிரத திணைக்களம்) மற்றும் கலையரசி புஸ்பநாதன்(Canada), தருலிங்கநாதன் (France), மங்கையற்கரசி ராஜசூரியர்(Canada) ஆகியோரின் அன்பு மைத்துனரும், திலகஷி(மாணவி பொறியியல் பீடம் மொறட்டுவ பல்கலைக்கழகம்), அகனீதா, தரணிகா(யாழ்வேம்படி மகளிர் உயர்தர பாடசாலை) ஆகியோரின் அன்புப் பேரனும் புனிதாவின் அன்பு ஐயாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் 10-03 2019 ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, முற் பகல் 11 மணிக்கு பூதவுடல் யாழ்  பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பிற்பகல்  12.30 மணிக்கு கொக்குவில் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

 

 

அன்னரின் இறுதி விருப்பத்திற்கேற்ப கண்ணீர் அஞ்சலி பிரசுரம் மற்றும் மலர் வளையம் போன்றவற்றைத்தவிர்த்து அதற்கான பணத்தை திருநெல்வேலி வலுவிழந்தோர் புனர்வாழ்வுச்சங்கத்திற்கு வழங்குமாறு தயவுடன் கேட்டுகொள்கிறோம்.
-குடும்பத்தினர்-

473 ஆடியபாதம் வீதி
திருநெல்வேலி

தகவல்: மலையரசி சிவராஜா (மனைவி)

 


தொடர்புகளுக்கு

மலையரசி சிவராஜா (மனைவி)
94212228759
-->


துயர் பகிர்வு