5ம் ஆண்டு நினைவஞ்சலி

பெயர் : அமரர் நிரோஷா உதயகுமாரன் (Mc Master University)
பிறப்பு : 1989-August-02
இறப்பு : 2013-September-25
02152img.png

கனடா Mississauga வைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்டிருந்த நிரோஷா உதயகுமாரன் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.

அழகுநிறை வதனமதில் தவழ்ந்திடும் புன் சிரிப்பும்
பழகு தமிழ் மொழியில் பாங்கான இன் சொல்லும்
கருவினிலே திருவும் கலங்காத உள்ளமதும்
உருவினிலே அமைதியுமாய் உலகினிலே பவனி வந்தாய்

திண்ணமாய் கல்வியினை தொடர்ந்து பல வளம் பெறவே
எண்ணிய எண்ணமது இடையினிலே முடிந்ததேனோ?
கண்ணினிலே மணியெனவே கலங்கரை விளக்கானாய்
விண்ணகம் சென்றுவிட்ட விந்தையென்ன சொல்வாயோ

கற்றுவந்த கல்வியிலே கடுகளவும் பிசகில்லை- இளமையிலே
பெற்று விட்ட சித்திகளே உன் திறமைக்கோர் எடுத்துக்காட்டு
உற்றாரும் உறவினரும் உன் உயர்வை எதிர்பார்க்க காலன் உன்னை
பற்றிச்சென்ற மர்மம் என்ன பகர்ந்திடுவாய் கண்மணியே!

வாழ்வினிலே சிறந்து வளமாக வாழ்ந்த உன்னை
காலனவன் கவர்ந்து சென்ற காரணத்தை நாம் அறியோம்?
பாருலகம் கண்ணீரை மழையெனவே சிந்திடுதே- நீ
வானுலகம் சென்றாலும் உன் நினைவதுவோ
எம் நெஞ்சில் என்றும் அகலாது ...!

உங்கள் ஆத்மா சாந்தியடைய இறவனைப் பிரார்த்திக்கின்றோம்.


தொடர்புகளுக்கு

தகவல்
அப்பா, அம்மா, சகோதரிகள்
-->


துயர் பகிர்வு