5ம் ஆண்டு நினைவஞ்சலி

பெயர் : அமரர் கிறிஸ்ரிரூபன் அல்றிக் செளஜன்யன்
பிறப்பு : 2006-July-19
இறப்பு : 2013-July-10

வவுனியாவைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும், ஜோர்தானை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கிறிஸ்ரிரூபன் அல்றிக் செளஜன்யன் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.

அன்னார், கிளிநொச்சியைச் சேர்ந்த கிறிஸ்ரிரூபன் நிமலினி தம்பதிகளின் அன்புப் புதல்வர் ஆவார்.

"உலகின் அனைத்திலும் இரக்கம் காட்டு.
சந்தோசமாயிரு. துன்பங்களை மறந்தாலே சந்தோசம் வரும்.
பிரார்த்தனை செய். நம்பிக்கையோடிரு!"
-அல்றிக் சௌஜன்யன்-

 

 


நீள உறங்காதே கண்மணியே!
நெஞ்சமெல்லாம் இருளாய்க் கிடக்கிறது
நீ - மீண்டு வர வழியில்லை - ஆனால்
மீண்டும் வரலாமன்றோ?

வலிக்கிறதடா இதயமெங்கும்
விழி நீ திறந்து விடு.
ஒளி மிகுந்த உன் பார்வையாலே
வழி எமக்கு காட்டிவிடு- இல்லை
உள்ளே உறைந்திருக்கும் - எம்
விழி நீர் திறந்து விடு

பாசமுள்ள தம்பியாக
உற்ற நண்பனாக
விளையாட்டுத் தோழனாக 
நீ மட்டுமே உன் அண்ணனுக்கு. 

ஏழு மாதங்களாக  - உன்
பூவிரல்களில் தவழ்ந்த
அருமைத் தம்பியில்  -நாம்
உன்னைத் தானே தேடுகிறோம்.

எந்தச் சிகரம் தான் நாம் தொட்டாலும்
நீயில்லாத இந்த நாட்களை
�நாட்களா�க அல்ல  - ஒரு
நரகமாக கூட ஏற்க முடியாதடா!

எங்கும் நீ நிறைந்தாய்
எதிலும் நீயே நிறைந்தாய்
எங்களில் கண் - நீர் நிறைத்து
நிஜத்தில் ஏன் மறைந்தாய்?

நெஞ்சம் என்றும் தவிக்கிறது -உன்
கொஞ்சிடும் மொழி கேட்க,
பிஞ்சு விரல் தீண்டி விட,
வஞ்சமில்லா புன்னகையாம்  - உன்னை
வாரி அணைத்துக் கொள்ள
நெஞ்சம் என்றும் தவிக்கிறது
வந்துவிடு எம் கண்ணே - நாம்
வாரி அணைத்துக் கொள்ள.

எம் செள குட்டியின் நினைவுத் திருப்பலி வட்டக்கச்சி கல்மடுநகர், நாவற்காடு புனித அந்தோனியார் தேவாலயத்தில் 10-07-2018 செவ்வாய்க்கிழமை அன்று பி.ப 05:00 மணிக்கு ஒப்புக்கொடுக்கப்படும். இத்திருப்பலியில் அனைவரும் கலந்துகொண்டு எம் கண்மணியின் ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

 

தகவல்

குடும்பத்தினர்


தொடர்புகளுக்கு

கிறிஸ்ரிரூபன்
-->


துயர் பகிர்வு