தொழில்நுட்பம் செய்திகள்

WhatsApp இல் பலருக்கும் தெரியாத அம்சங்கள்!

06 Sep 2021

வாட்ஸ் அப்பை நாம் தினமும் பயன்படுத்தினாலும் அதில் நமக்கு அதிகம் பரிட்சியம் இல்லாத அம்சங்கள் இருக்கவே செய்கின்றன.

வாட்ஸ் அப்பில் பலருக்கும் தெரியாத அம்சங்கள்

ஆர்ச்சிவ் சாட் (Archive chat)

இந்த அம்சம் குறிப்பிட்ட ஏதேனும் ஒரு சாட்டினை தற்காலிகமாக மூடி வைத்து அதனை பின்னர் பயன்படுத்த வழி செய்யும். இதை மேற்கொள்ள நீங்கள் மறைக்க விரும்பும் சாட்டினை அழுத்தி பிடித்து ஆர்ச்சிவ் சாட் பட்டனை க்ளிக் செய்தால் போதுமானது.

ம்யூட் க்ரூப் சாட் (Mute Group chat)

சில சமயங்களில் க்ரூப் சாட்களின் நோட்டிபிகேஷன்கள் வெறுப்பேற்றலாம், அது போன்ற நேரங்களில் Menu button – Mute Button – Group Name – ஐ க்ளிக் செய்யலாம்.

லாஸ்ட் சீன் (Last seen)

நீங்கள் கடைசியாக வாட்ஸ் அப் பயன்படுத்திய நேரத்தினை வாட்ஸ் அப் தானாகவே காண்பிக்கும், இதை நிறுத்த Settings– Account — Privacy –Last seen Option- ஐ க்ளிக் செய்து Nobody என்ற பட்டனை க்ளிக் செய்தால் போதுமானது.

ஷார்ட்கட் (Shortcut)

சாட் மெனுவினை அழுத்தி பிடித்தால் அவை ஷார்டகட்டாக ஹோம் ஸ்கிரீனில் தெரியும். ஒரு வேலை சைனோஜென் இயங்குதளத்தினை பயன்படுத்தினால் செயலியை டிராக் செய்து தனி ஃபோல்டரில் பாஸ்வேர்டு செட் செய்தும் வைத்து கொள்ளலாம்.

குறுந்தகவல் (Message)

நீல நிற அம்பு குறி தெரிந்தால் உங்களது குறுந்தகவல் படிக்கப்பட்டு விட்டது என அர்த்தமாகும், ஆனால் சரியான நேரத்தினை அறிந்து கொள்ள குறுந்தகவலை அழுத்தி பிடித்து (i) ஐகானை க்ளிக் செய்தால் போதுமானது.  

புகைப்படங்கள் (Photos)

வாட்ஸ் அப் புகைப்படங்களை கேலரி அல்லது கமெரா ரோலில் வைத்து கொள்வது சில சிலருக்கு பிடிக்காமல் இருக்கும். அவ்வாறானவர்கள் புகைப்படங்களை வாட்ஸ்அப் செயலி மூலம் மறைத்து வைத்து கொள்ளலாம்.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்


Powered by Jasper Roberts - Inayam