கனடா செய்திகள்

Kitchener பகுதியில் பெண் உயிரிழந்த நிலையில் கணவன் மீது கொலைக் குற்றச்சாட்டு

10 Oct 2018

Kitchener பகுதியில் வீடு ஒன்றில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தில் மனைவி உயிரிழந்த நிலையில், அச் சம்பவம் தொடர்பில் அவரது கணவர் மீது கொலை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த வீட்டில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுவந்த பொலிஸார் 6 வாரங்களின் பின்னர் நேற்று முன்தினம் (திங்கட்கிழமை) அவரை கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர் 58 வயதுடைய உடோ ஹான் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் குறித்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றபோது 58 வயதுடைய அவரது மனைவி உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்