கனடா செய்திகள்

Free Willy bill என்ற புதிய சட்டம் தொடர்பான மனு கனடாவின் நாடாளுமன்றத்தில் தாக்கல்

12 Jun 2019

இயற்கை வளங்களையும், உயிரினங்களையும் பாதுகாப்பதற்கு ஏதுவாக ‘ஃப்ரி வில்லி’ (Free Willy bill) என்ற புதிய சட்டம் தொடர்பான மனு கனடாவின் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த சட்டத்தின்படி தனி நபர்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் யாரும் திமிங்கிலங்கள் மற்றும் டொல்பின் மீன்களை பிடிப்பதற்கு தடை விதிக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த சட்டம் தற்போது அமுலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

அத்துடன், அவற்றை வளர்ப்பதற்கும், இனப்பெருக்கம் செய்ய பயன்படுத்துவதற்கும் முற்றிலும் தடை விதிக்க இந்த சட்டத்தின் ஊடாக வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இந்த புதிய சட்டம் உடனடியாக அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், இதனை மீறுபவர்கள் இலங்கை மதிப்பில் இரண்டரைக் கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகையை அபராதமாக செலுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே, விலங்குகள், உயிரினங்களுக்காக குரல் கொடுத்துவரும் பீட்டா அமைப்பு இந்த சட்டத்தை அமுல்படுத்தக் கோரி போராட்டம் நடத்தியது. இதன் விளைவாக இறுதியில் அந்த சட்டம் அமுல்படுத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்