கனடா செய்திகள்

COVID பரிசோதனை தேவையை கனடா கைவிடுகிறது

17 Mar 2023

சீனாஇ ஹாங்காங் அல்லது மக்காவோவிலிருந்து கனடாவுக்குச் வரும் எவருக்கும் கட்டாய COVID-19 சோதனைத் தேவையை கனடா அரசாங்கம் வெள்ளிக்கிழமையுடன்(17) முடிவுக்குக் கொண்டுவருகிறது.

சீனா நீண்டகால பொது சுகாதார கட்டுப்பாடுகளை நீக்கிய பின்னர், அந்த இடங்களிலிருந்து வரும் மக்களுக்கு ஜனவரி மாதம் முதல் போர்டிங் COVID-19 சோதனைகளை அரசாங்கம் கட்டாயப்படுத்தியது.

சீனாவில் கோவிட்-19 தொற்றுக்களின் வியத்தகு அதிகரிப்பு பற்றிய அறிக்கைகள் மற்றும் நாடு முழுவதும் பரவக்கூடிய சாத்தியமான மாறுபாடுகள் பற்றிய தரவுகளின் பற்றாக்குறை  காரணமாகவும் கனடா அரசாங்கம் கவலை கொண்டிருந்தது.

அந்த நேரத்தில் கனடாவின் பொது சுகாதார நிறுவனம் குறைந்தபட்சம் ஏப்ரல் 5 வரை சோதனைத் தேவை இருக்கும் என்று சுட்டிக்காட்டியது.

'கனடா மற்றும் பிற நாடுகள் ஜனவரி 2023 இல் தற்காலிக எல்லை நடவடிக்கைகளை மேற்கொண்டதிலிருந்து, சீனாவின் தரவு, சர்வதேச சமூகம் மற்றும் கனடாவில் நடத்தப்பட்ட கழிவு நீர் மாதிரிகள் ஆகியவை கவலைக்குரிய புதிய மாறுபாடுகளைக் கண்டறியவில்லை' என்று கனேடிய அதிகாரிகள் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவிலிருந்து வரும் பயணிகளுக்கான எல்லைக் கட்டுப்பாடுகளை கடினப்படுத்தும் நடவடிக்கை சில தொற்று நோய் நிபுணர்களிடமிருந்து விமர்சனத்தை ஈர்த்தது, அவர்கள் வைரஸின் உலகளாவிய பரவலைத் தடுக்க சிறிதளவுவுதான் உதவி செய்யும் மற்றும் சீன எதிர்ப்பு பாகுபாட்டை மோசமாக்கும் என்று அஞ்சினார்கள்.

கடந்த வாரம் இதேபோன்ற முன் போர்டிங் சோதனை தேவையை அமெரிக்கா முடிவுக்கு கொண்டு வந்தது.






கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்


Powered by Jasper Roberts - Inayam