கனடா செய்திகள்

401 கிழக்கு நெடுஞ்சாலையில் விபத்து இருவர் பலி

12 Aug 2019

மிசிசாகாவில் உள்ள டிக்ஸி வீதிக்கு அருகே கிழக்கு திசையில் 401 இல் பாரஊர்தி டிரக் மற்றும் மூன்று வாகனங்கள் மோதியதில் இருவர் உயிரிழந்துள்ளனர், மேலும் நான்கு பேர் காயமடைந்தனர்.

 ஒரு கார் கட்டுப்பாட்டை இழந்து போக்குவரத்து டிரக் மீது மோதியது, இதனால் இரவு 9:30 மணியளவில் டிரக் கவிழ்ந்து தீப்பிடித்தது.

நான்கு பேரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாக பீல் துணை மருத்துவர்களும் தெரிவித்தனர். மூன்று பேர் பலத்த காயம் மற்றும் ஒருவர் உயிருக்கு ஆபத்தான காயங்களுடன் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

விசாரணை மற்றும் துப்பரவு செய்வதற்கு நீண்டநேரம் ஆகும் என்றும், நெடுஞ்சாலை 403 மற்றும் டிக்ஸி சாலைக்கு இடையிலான 401 ஒரு குறிப்பிட்ட காலநேரத்துக்கு மூடப்படும் என்று பொலிசார் தெரிவித்துள்ளனர்.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்