உலகம் செய்திகள்

4,500 தொழிலாளர்களை பணி நீக்கம் செய்ய ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனம் முடிவு

11 Jan 2019

உலக அளவில் ஆடம்பர ரக கார்களை விற்பனை செய்து வரும் கார் தயாரிப்பு நிறுவனம் ஜாகுவார் லேண்ட் ரோவர்.  சீன விற்பனையில் ஏற்பட்ட சரிவு மற்றும் ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து நாடு வெளியேறும் முடிவால் ஏற்பட கூடிய தொழிற்போட்டி ஆகியவற்றால் இதன் இந்திய தயாரிப்பு நிறுவனம் அச்சமடைந்து உள்ளது.  இதனால் தனது நிறுவனத்தின் தொழிலாளர்களை பணியில் இருந்து நீக்க முடிவு செய்துள்ளது.

இதுபற்றி அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், தொழில் ரீதியிலான மறுஆய்வை மேற்கொள்ள ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனம் முடிவு செய்துள்ளது.  இதனால் உலக முழுவதிலும் உள்ள 4,500 பணியாளர்களை நீக்குவது என முடிவு செய்யப்பட்டு உள்ளது என தெரிவித்து உள்ளது.

கடந்த 2018ம் ஆண்டில் நிறுவனத்தில் இருந்து வெளியேறிய 1,500 பேருடன் கூடுதலாக இந்த எண்ணிக்கையிலான நீக்கம் இருக்கும் என்றும் தெரிவித்து உள்ளது.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்