இந்தியா செய்திகள்

20 ஆண்டுகளில் முதல் முறையாக நேரடி வரி வசூல் வீழ்ச்சியடைய வாய்ப்பு?

24 Jan 2020

பிரதமர் நரேந்திர மோடியின் அரசாங்கம் மார்ச் 31 ஆம் தேதியுடன் முடிவடைந்த ஆண்டிற்கான நேரடி வரி வசூல் ரூ.13.5 லட்சம் கோடி என இலக்கு நிர்ணயித்தது. இது முந்தைய நிதியாண்டில் 17 சதவீதம் அதிகமாகும்.

வரித் துறை ஜனவரி 23 ஆம் தேதி நிலவரப்படி ரூ.7.3 லட்சம் கோடியை மட்டுமே வசூலிக்க முடிந்தது.  இது கடந்த ஆண்டு இதே புள்ளியில் வசூலிக்கப்பட்ட தொகையை விட 5.5 சதவீதத்திற்கும் அதிகமாகும் என்று மூத்த வரி அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

முதல் மூன்று காலாண்டுகளுக்கு முன்கூட்டியே நிறுவனங்களிடமிருந்து வரிகளை வசூலித்த பின்னர், அதிகாரிகள் பொதுவாக இறுதி மூன்று மாதங்களில் ஆண்டு நேரடி வரிகளில் 30-35 சதவீதத்தைப் பெறுவார்கள் என்று  கடந்த மூன்று ஆண்டுகளின் புள்ளிவிவரங்கள் காட்டுகிறது.

ஆனால் ராய்ட்டர்ஸ் பேட்டி கண்ட எட்டு மூத்த வரி அதிகாரிகள், இந்த சிறந்த நிதியாண்டில் நேரடி வரி வசூல் 2018-19 ஆம் ஆண்டில் வசூலிக்கப்பட்ட ரூ. 11.5 லட்சம் கோடிக்கு கீழே குறைய வாய்ப்புள்ளது என கூறி உள்ளனர்.

"இலக்கை மறந்துவிடுங்கள். நேரடி வரி வசூலில் வீழ்ச்சியை நாங்கள் காண்பது இதுவே முதல் முறை" என்று புதுடெல்லியை சேர்ந்த ஒரு வரி அதிகாரி கூறி உள்ளார். இந்த ஆண்டிற்கான நேரடி வரி வசூல் 2019 நிதியாண்டில் சுமார் 10 சதவீதத்திற்கும் குறைவாக இருக்கும் என்று அவர் மதிப்பிடுகிறார்.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்