இலங்கை செய்திகள்

1500 மருத்துவப் பட்டதாரிகளுக்கு இன்று வைத்தியர் நியமனம்

11 Sep 2019

அரச பல்கலைக்கழகங்களில் மருத்துவ பட்டத்துக்கான பாடநெறியை நிறைவு செய்த, சுமார் 1500 மருத்துவத்துறை மாணவர்களுக்கு இன்று பயிலுனர் வைத்தியர்களாக பணியாற்றுவதற்கான நியமனம் வழங்கப்படவுள்ளது.

இதற்கான நிகழ்வு இன்று பிற்பகல் 2.00 மணிக்கு அலரி மாளிகையில் இடம்பெறவுள்ளது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க, சுகாதார, போசணை மற்றும் சுதேச வைத்திய அமைச்சர் ராஜித சேனாரத்ன, சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அனில் ஜாசிங்க மற்றும் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்நிகழ்வில் கலந்து கொள்ளவுள்ளனர்.






கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்