இலங்கை செய்திகள்

12 இந்திய மீனவர்கள் விடுதலை

18 Mar 2023

வடமராட்சி கிழக்கு கடற்பரப்பில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள்  12 பேரும் நிபந்தனையுடன் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த  12 மீனவர்களும் கடந்த  ஞாயிற்றுக்கிழமை வடக்கு கடற்பரப்பில் கைது செய்யப்பட்டு கடந்த திங்கட்கிழமை பருத்தித்துறை  நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட நிலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்கள்.

இந்த நிலையில் நேற்று பருத்தித்துறை நீதிமன்றத்தில் வழக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு  12 மீனவர்களுக்கும் 10 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட ஒன்றரை வருட சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அவர்கள் பயன்படுத்திய படகு அரசுடமையாக்கப்பட்டுள்ளது. மேலும், குறித்த 12 மீனவர்களையும் இந்தியாவிற்கு அனுப்பும் பணிகளில் இந்திய துணை தூதரகத்தினர் ஈடுபட்டு வருகிறார்.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்


Powered by Jasper Roberts - Inayam