இந்தியா செய்திகள்

11 எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான தகுதிநீக்க வழக்கு ஒத்திவைப்பு

11 Jan 2019

தமிழக சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்கள் எதிர்த்து வாக்களித்தனர். அவர்களை தகுதிநீக்கம் செய்யக்கோரி தி.மு.க. கொறடா சக்கரபாணி, சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். இதேபோல் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 7 எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் செய்யக்கோரி வெற்றிவேல், தங்க தமிழ்செல்வன் உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்கின் விசாரணையும் சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.

இந்த வழக்குகளில் சக்கரபாணி தரப்பில் மூத்த வக்கீல் கபில் சிபலும், தங்க தமிழ்ச்செல்வன் சார்பில் மூத்த வக்கீல் அபிஷேக் மனு சிங்வியும், ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் தரப்பில் மூத்த வக்கீல்கள் சி.எஸ்.வைத்தியநாதன், முகுல் ரோத்தகி உள்ளிட்ட வக்கீல்களும், சட்டப்பேரவை செயலாளர் தரப்பில் மணிந்தர் சிங்கும் தங்கள் வாதங்களை முடித்துள்ளனர்.

ஒத்திவைப்பு

மனுதாரர்கள் தரப்பில் மீண்டும் நேற்று இரண்டாவது சுற்று வாதங்கள் தொடருவதாக இருந்தது.

இந்நிலையில் நீதிபதி ஏ.கே.சிக்ரி தலைமையிலான அமர்வு முன்பு தினகரன் ஆதரவாளர்கள் தரப்பு ஆஜராகி தங்கள் மூத்த வக்கீல்கள் ஆஜராக முடியாத நிலையில் உள்ளதால் வழக்கு விசாரணையை வேறு தேதிக்கு ஒத்திவைக்குமாறு முறையீடு செய்தனர்.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் விசாரணையை 17-ந் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.


 


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்