இந்தியா செய்திகள்

‘ஒரே நாடு, ஒரே ரேஷன்’ திட்டம் -தமிழக அரசு அரசாணை வெளியீடு

24 Jan 2020

நாடு முழுவதும் ஒரே ரேஷன் கார்டை பயன்படுத்தி பொருட்கள் வாங்கும் வகையில் ‘ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு’ திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. 

நாடு முழுவதும் இந்த திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக மத்திய நுகர்வோர் நலன் மற்றும் உணவுத்துறை மந்திரி ராம்விலாஸ் பஸ்வான் அனைத்து மாநிலங்களின் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வந்தார். 2020-ம் ஆண்டு ஜூன் 30-ம் தேதிக்குள் நாடு முழுவதும் இந்த திட்டத்தை நடைமுறைபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், ஒரே நாடு ஒரே ஒரே ரேஷன் கார்டு திட்டம் தமிழகத்தில் அமல்படுத்தப்படும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இந்தத் திட்டத்தில் குடும்ப அட்டைதாரர்கள் தமிழகத்தில் உள்ள எந்த ரேஷன் கடையிலும் பொருட்கள் வாங்கலாம்.  இந்த திட்டம் தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் மட்டும் முதற்கட்டமாக அமல்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டம் அனைத்து மாவட்டங்களிலும் விரைவில் செயல்படுத்தப்பட உள்ளது. 

ஜூன் மாதம் முதல் ஒரே நாடு ஒரே ரேசன் திட்டம் அமல்படுத்தபட உள்ள நிலையில், தமிழகத்தில் தற்போது இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்