கனடா செய்திகள்

வெஸ்ட் எண்ட் பகுதியில் வாகனம் ஒன்றுடன் மோதி சைக்கிளில் சென்றவர் படுகாயம்

13 May 2019

வான்கூவர் வெஸ்ட் எண்ட் பகுதியில் SUV ரக வாகனம் ஒன்றுடன் மோதி சைக்கிளில் சென்றவர் படுகாயமடைந்துள்ளனர்.

இதனை அடுத்து குறித்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவ உதவியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

நேற்று இடம்பெற்ற இந்த விபத்தில் காயமடைந்தவர் 40 வயதுடைய நபர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்தோடு இந்த விபத்து காரணமாக ராப்சன் வீதி பல மணிநேரங்கள் மூடப்பட்டிருந்ததாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்