இலங்கை செய்திகள்

வெள்ளை வான் கலாச்சாரத்தை அறிமுகப்படுத்தியது கோட்டாபய ராஜபக்ஷவே - மேர்வின் சில்வா

13 Jun 2018

மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் காலத்தில் வெள்ளை வான் கலாச்சாரத்தை அறிமுகப்படுத்தியது கோட்டாபய ராஜபக்ஷவே எனத் தெரிவித்துள்ள முன்னாள் அமைச்சர்  மேர்வின் சில்வா,  கோட்டாபய ராஜபக்ஷ  ஜனாதிபதியானால்  தான் நாட்டிலிருந்து வெளியேறுவேன் எனவும் தெரிவித்துள்ளார்.

முன்னைய அரசாங்கத்தின் போது கோட்டாபயவும் பசில் ராஜபக்ஷவுமே நாட்டை ஆண்டனர் என அவர் கூறினார்.

வெள்ளை வான் கலாச்சாரத்தை அறிமுகப்படுத்தியவர் கோட்டாபய ராஜபக்ஷ. இலங்கையில் முதலீடு செய்ய முன்வந்த வெளிநாட்டவர்களிடம்  பசில் ராஜபக்ஷ பணம் பெற்றார் எனவும் மேர்வின் சில்வா குறிப்பிட்டுள்ளார்.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்