இந்தியா செய்திகள்

விவசாயிகளுக்கு தலை வணங்குகிறோம்: மோடி

17 Jul 2017

நாட்டில் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்ய கடின உழைப்பை வழங்கும் நமது விவசாயிகளுக்கு தலை வணங்குகிறோம். அவர்களை நினைவில் வைத்து இந்த அமர்வு தொடங்குகிறது என்று மோடி கூறினார்.

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. முன்னதாக சபைக்கு வந்த பிரதமர் மோடி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

''ஜிஎஸ்டி திட்டம் நாடு முழுவதும் வெற்றிகரமாக அமல்படுத்தப்பட்டதற்குப் பிறகு நாடாளுமன்றம் கூடுவதால், இந்தக் கூட்டத்தொடரானது புதிய ஊக்கத்தைக் கொடுக்கும்.

ஜிஎஸ்டி அமல்படுத்தும்போது அனைத்துக் கட்சிகளிடமும் இருந்த ஒற்றுமையான செயல்பாடு மழைக்காலக் கூட்டத்தொடரிலும் இருக்கும் என நம்புகிறேன்.

நாட்டின் நலனுக்கான முக்கிய முடிவுகளை எடுப்பதற்கும், அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் எம்.பிக்கள் ஆரோக்கியமான விவாதத்தில் பங்கேற்கவும் இந்தக் கூட்டத்தில் வாய்ப்பாக அமையும்.

இந்தக் கூட்டத்தொடர் மிகவும் முக்கியமானது. வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி இந்திய சுதந்திர தினத்தின் 70-வது ஆண்டு தினத்தைக் கொண்டாட உள்ளோம். அதேபோல் ஆகஸ்ட் 8-ம் தேதி வெள்ளையனே வெளியேறு இயக்கம் தொடங்கப்பட்டு (1942, ஆகஸ்ட் 8) 75 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது.

கூட்டத்தொடர் தொடங்கும் நிலையில் நாட்டில் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்ய கடின உழைப்பை வழங்கும் நமது விவசாயிகளுக்கு தலை வணங்குகிறோம். அவர்களை நினைவில் வைத்து இந்த அமர்வு தொடங்குகிறது'' என்று மோடி கூறினார்.

 

 


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்