இலங்கை செய்திகள்

விஜேதாச ராஜபக்ஷவை பதவியிலிருந்து நீக்குமாறு ஐ.தே.க ஜனாதிபதியிடம் கோரவுள்ளது

12 Aug 2017

நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவை பதவியிலிருந்து நீக்குமாறு, ஐக்கிய தேசியக் கட்சி தலைமைப்பீடம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நீதியமைச்சருக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் ஐ.தே.க. உறுப்பினர்கள் சிலரும் நேற்று வெள்ளிக்கிழமை கையெழுத்திட்டதாக கட்சி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

அம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பான தீர்மானத்தை விமர்சித்து, அமைச்சரவையின் கூட்டுப் பொறுப்பை மீறியதாக, நீதியமைச்சர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், விஜேதாச ராபக்ஷவிற்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை சமர்ப்பிப்பது தொடர்பில் எதிர்வரும் 17ஆம் திகதி நடைபெறவுள்ள ஐ.தே.க. கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்

Inayam TV