கனடா செய்திகள்

வாகனத்தினால் மோதுண்ட பெண் பாதசாரி ஒருவர் மருத்துவமனையில் அனுமதி

21 Oct 2019

இன்று காலை வேளையில் பிரம்டனில் இடம்பெற்ற வீதி விபத்தில், வாகனத்தினால் மோதுண்ட பெண் பாதசாரி ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். Steeles Avenue மற்றும் Rutherford வீதிப் பகுதியில், இன்று காலை ஆறு மணியளவில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.

படுகாயமடைந்த அந்தப் பெண் ஆபத்தான நிலையிலேயே மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டதாக அவசர மருத்துவப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

எனினும், மருத்துவமனையில் சிகிச்சைக்கு உள்ளாக்கப்பட்ட அவரின் உயிருக்கு ஆபத்து இல்லை என்று நம்புவதாக, பொலிஸார் பின்னதாக தகவல் வெளியிட்டுள்ளனர்.

குறித்த அந்தப் பெண்ணின் பெயர் வயது உள்ளிட்ட விபரங்கள் உடனடியாக வெளியிடப்படாத நிலையில், விபத்து இடம்பெற்ற அந்தப் பகுதி ஊடான போக்குவரத்துகளைத் தடை செய்த அதிகாரிகள், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்