இலங்கை செய்திகள்

வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிரான இடைக்காலத் தடை 8ஆம் திகதி வரை நீடிப்பு

06 Dec 2018

ஜனாதிபதியின் வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிரான இடைக்காலத் தடை 8ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றத்தைக் கலைப்பது தொடர்பில் வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலை இரத்துச் செய்யக்கோரி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரணை செய்த உயர்நீதிமன்றம் அதற்கு  நாளை 7ம் திகதி வரை இடைக்காலத் தடை விதித்திருந்தது.

குறித்த மனுக்கள் தொடர்பான விசாரணை இன்று மூன்றாவது நாளாகவும் 7 நீதியரசர்கள் அடங்கிய குழாமால் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதுடன், குறித்த வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக விதிக்கப்பட்​டிருந்த இடைக்கால தடையுத்தரவை நாளை மறுதினம் வரை நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய நாளைய தினமும் குறித்த மனுக்கள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. 


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்