சினிமா செய்திகள்

வடிவேலுக்கு எச்சரிக்கை விடுத்த சமுத்திரகனி

12 Jun 2019

இயக்குனர் சிம்பு தேவன், இயக்குனர் ‌ஷங்கர் மற்றும் தயாரிப்பாளர் சங்கத்தை கடுமையாக விமர்சித்துப் பேசிய வடிவேலுக்கு சமுத்திரகனி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

வடிவேலு தனியார் யூடியூப் சேனல் ஒன்றிற்கு பேட்டி அளித்திருந்தார். பிரெண்ட்ஸ் திரைப்படம் குறித்தும், அதில் நேசமணி கதாபாத்திரம் உருவான விதம் குறித்தும் தனது பேட்டியில் குறிப்பிட்டிருந்தார்.

சமீபகாலங்களில் வடிவேலு நடிப்பில் புதிய படங்கள் வெளிவராததற்கான காரணம் என்ன அன்று அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த வடிவேலு இயக்குனர் சிம்பு தேவன், இயக்குனர் ‌ஷங்கர் மற்றும் தயாரிப்பாளர் சங்கத்தை கடுமையாக விமர்சித்துப் பேசினார். 

அவரது பேட்டிக்கு, பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர். இயக்குனர் சிம்பு தேவனிடம் உதவியாளராகப் பணியாற்றி, பின்னர் மூடர் கூடம் திரைப்படம் மூலமாக இயக்குனராக அறிமுகமான நவீன், வடிவேலு பேட்டிக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். தற்போது சமுத்திரகனி தனது ட்விட்டர் பக்கத்தில், வடிவேலுவின் பேட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். ’அண்ணன் வடிவேலு அவர்களின் பேட்டி பார்த்தேன்.

இயக்குனர்கள் ‌ஷங்கர், சிம்புதேவன் இருவரையும் நாகரீகமற்ற வார்த்தையால் பேசியிருப்பது பெரும் வருத்தத்திற்கும் கண்டனத்திற்கும் உரியது. சிம்புவின் படைப்பாற்றல் புலிகேசி தவிர்த்து மற்ற படைப்புகளிலும் தெரியும். இயக்குனர்களை அவமதிக்காதீர்கள்’ என்று அவர் டுவீட் செய்துள்ளார்.


 


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்