சினிமா செய்திகள்

வசூல் வேட்டையில் 'வாத்தி'.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு

18 Mar 2023

தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில், தனுஷ் நடித்துள்ள திரைப்படம் 'வாத்தி'. சம்யுக்தா மேனன் கதாநாயகியாக நடித்திருக்கும் இப்படம் நேரடியாக தெலுங்கிலும் 'சார்' என்ற பெயரில் வெளியானது. இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

இப்படம் கடந்த 17-ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. சில தினங்களுக்கு முன்பு இப்படத்தின் வெற்றியை படக்குழு கேக் வெட்டி கொண்டாடினர். இதையடுத்து 'வாத்தி' திரைப்படம் உலக அளவில் ரூ.100 கோடியை வசூல் செய்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது.

இந்நிலையில், 'வாத்தி' படத்தின் புதிய வசூல் அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் உலக அளவில் ரூ.118 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

'வாத்தி' திரைப்படம் இன்று நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது குறிப்பிடத்தக்கது.






கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்


Powered by Jasper Roberts - Inayam