உலகம் செய்திகள்

வங்காளதேச எழுத்தாளர் ஷாஜகான் பாச்சு சுட்டுக்கொலை

13 Jun 2018

வங்காளதேசத்தை சேர்ந்தவர் பிரபல எழுத்தாளர் ஷாஜகான் பாச்சு (வயது 60). இவர் பிஷாகா புராக்காசோனி என்ற பதிப்பகத்தையும் நடத்தி வருகிறார்.

வங்காளதேச நாட்டில் மதசார்பற்ற கொள்கைகள் பற்றி துணிச்சலுடன் பேசி அது தொடர்பான கருத்துக்களை வெளியிட்டு வந்தவர் ஷாஜகான் பாச்சு. இவர் நேற்று அவரது சொந்த ஊரான ககால்டிக்கு சென்றிருந்தார்.

நண்பர்களை பார்க்க, அப்பகுதியில் உள்ள மருந்தகத்திற்கு அவர் சென்றிருந்த போது, அங்கே 2 மோட்டார் சைக்கிளில் வந்த 5 பேர் மருந்தகத்திற்குள் கச்சா வெடிக்குண்டுகளை வீசினார்.

இதனால் அப்பகுதி முழுவதும் பரபரப்பு ஏற்பட, தொடர்ந்து அந்த 5 மர்ம நபர்களும் உள்ளே சென்று ஷாஜகான் பாச்சுவை வெளியே தர தர என்று இழுத்து வந்தனர். அவரை சராமாரியாக துப்பாக்கியால் சுட்டுத்தள்ளினர்.

சம்பவ இடத்தில் அப்படியே உயிரிழந்தார் ஷாஜகான் பாச்சு. மதசார்பற்ற கொள்கைகளுக்கு எதிராக கருத்து தெரிவித்து வந்த ஷாஜகான் பாச்சுவிற்கு தொடர்ந்து பலரும் மிரட்டல் விடுத்து வந்தனர்.

பல மத அடிப்படைவாத அமைப்புகளிடம் இருந்து கொலை மிரட்டல்கள் வந்த நிலையில், அவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளது அரசியல் வட்டாரங்களிலும் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சுட்டுக்கொல்லப்பட்ட எழுத்தாளர் ஷாஜகான் பாச்சு, வங்காளதேச நாட்டின் கம்யூனிஸ்டு கட்சியின் முன்னாள் மாவட்ட செயலாளராக இருந்துள்ளார். வங்காளதேசத்தில் மதசார்பின்மைக்கு ஆதரவு தெரிவித்து பேசி வருபவர்கள் தொடர்ந்து கொலை செய்யப்பட்டு வருவது அந்நாட்டில் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்

Inayam TV